Description
சரபம் அல்லது சரப என இந்து புராணங்களில் குறிப்பிடப்படுபவர் சரபேஸ்வரர். இவர் சிங்க தலையும், பறவை மற்றும் விலங்கின் உடலைக் கொண்டவர்.
இவரைப் பிரதோஷ காலத்தில் வழிபட்டு, அவருக்குரிய மந்திரத்தை உச்சரிப்பதால், நம் எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள், பில்லி, சூனியம், ஏவல், உள்ளிட்ட செய்வினைகள் நீங்கும். எதிரிகளின் தொல்லை தீரும்.
இவரை அருகம்புல், வில்வம் கொண்டு ஆராதித்து வழிபடுவதால் திருமண தடைகள் நீங்கும்.
பிரதோஷ தினம் மட்டுமில்லாமல், பெளர்ணமி, அமாவாசை தினங்கள் இவரை வழிபடுவதற்கு மிக ஏற்ற நாள். இவரை முழு மனதோடு சரணடைந்தால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.
ஸ்ரீ சரபரின் மூல மந்திரம்
ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி
ஹாஸி, பிராணக்ர ஹாஸி
ஹூம் பட் ஸர்வ சத்துரு சம்ஹாரணாய
சரப ஸாலுவாய பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.
ஸ்ரீ சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்
ஓம் சாலுவேசாய வித்மஹே!
பக்ஷி ராஜாய தீமஹி !
தன்னோ சரப ப்ரசோதயாத்!!
Reviews
There are no reviews yet.