Description
ஸ்ரீ சக்கரம், சியாமள சக்ரமென்றும், லலிதா சக்ரமென்றும் கூறுவர். 43 முக்கோணங்களையுடைய இச்சக்கரம், மந்திரசக்தி மிகுந்த யந்திரமென்பர். பராசக்தியின் முழுவடிவையும், இயங்கு இயக்கக்சக்தியின் ‘சின்னம்” மட்டுமல்லாமல், இச்சக்கரத்தை முறையாக பூஜிப்பவர்கள், யாவற்று சக்திகளையும் அடைவர் என்பதை ஸ்ரீ ஆதிசங்கரர் விளக்கியுள்ளார். பல இடங்களில் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். 1. ஸ்ரீசைலம் : ஸ்ரீ பிரமராம்பாள், 2. ஜலாந்திரம் : கூர்ஜரம் – திரிபுரமாலினி யோகசூத்திரம் நூலை உலகிற்கு அருளிய ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷியால் விளக்கப்படும் யோக நிலைகளின் அடிப்படை குறியீடுகள் இச்சக்கரம் மூலம் வெளிப்படுவதாகக் கூறுவர்.
ஸ்ரீ சக்ரவிளக்கம்
பிரபஞ்ச ஸ்வரூபமாயிருக்கும் ‘ஓம்” ஒலியும் அதனால் உருவான அணுச்சலனத்திற்கு ஆதாரம் என்ற ‘மூலாதாரம்” என்பது பூமியும், அதன் கர்த்தா புவனத்தின் நாயகன் நர்த்தனன் அவனே. முதல்சக்கரமான நாற்சதுரபீடத்தின் இதழ்கள் நான்கு மஹாமேருபீடம். 3 முக்கிய ஒலி, ஒளி. நாடிகளான இட, பிங்க, சூஷ்மனா நாடிகளென்ற மூன்றினைக் காட்டுவதே நாற்சதுர 3 கோடுகள். ஆதிசங்கரரின் 8 பாடலில் கூறியிருப்பதை கவிராஜ பண்டிதர் இவ்விதம் கூறுகிறார்.
Reviews
There are no reviews yet.