Description
இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.
அவை :
- தினப்பொருத்தம்
- கணபொருத்தம்
- யோனிப்பொருத்தம்
- ராசிப்பொருத்தம்
- ரஜ்ஜிப்பொருத்தம்
இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு. ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ரஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது. எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
Reviews
There are no reviews yet.