Description
ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்போது ஒன்பது கிரகங்களும் எந்த கோணத்தில், எந்த இராசி வீட்டில் உள்ளன என்பதனை வரைபடம் போட்டு காண்பிக்கும் ஜாதக கட்டம், மற்றும் அதற்குரிய ஜோதிட குறிப்புகளும் ஆகும்.
அக் குறிப்பினை வாழ்நாள் ஜாதகம், ஜாதக கட்டம், சாதகம், ஜாதக குறிப்பு, ராசி கட்டம், கிரக கணிப்பு, கிரக நிலை கணிப்பு என பலவாறு அழைப்பர். ஜாதகம் பார்த்தல் என்பது தமிழ் ஜோதிடம் கூறும் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் ஆகியவற்றின் நிலை, செயல், சுபாவம், பலம், பலவீனம், ஆகியவற்றை கணித்து ஜாதக பலன் கூறுவதாகும்.
பிறந்த ஜாதகம் கணிக்க, பிறந்த காலம், இடம் மற்றும் உள்ளூர் பஞ்சாங்கம் தேவை, அப் பஞ்சாங்கமானது ஜாதககாரரின் பிறந்த ஊரின் அட்ச ரேகை தீர்க்க ரேகை இரண்டினையும் கருத்தில் கொண்டு தயாரிக்கபட்டதாக இருக்க வேண்டும்.
இங்கு நாம் வழங்கும் ஜாதகம், ஜாதக கட்டம் பலன்கள், அனைத்து ஜாதக குறிப்புகளையும் உள்ளடக்கியவை. அவையாவன; நட்சத்திரம், அதன் பாதம், ராசி, இலக்கினம், ராசி கட்டம், நவாம்ச கட்டம், நடப்பு தசை, புக்தி, திசை புத்தி காலங்கள், மற்றும் கிரகங்களின் பலம் – நட்பு, பகை, நீசம், உச்சம் ஆகியனவாகும்.
இவை மட்டுமல்லாமல் ஜாதகத்தில் நாக தோஷம், களத்திர தோசம், சர்ப்ப தோசம் மற்றும் செவ்வாய் தோசம் என அழைக்கபடும் தோஷங்கள் ஏதும் இருப்பின் அவற்றையும் இக் குறிப்பில் தெரிந்து கொள்க.
Reviews
There are no reviews yet.