கன்னி

கன்னி

வேதத்தின் கண் ஜோதிடம்.  அந்த கண்போன்ற ஜோதிடத்தின் ஆறாவது ராசி கன்னி.   தமிழ் மாதஙகளில் புரட்டாசி ஆரம்பமாகும் ராசி இதுதான். மாதுலக்காரகன், வித்தைக்காரகன், வித்யாக்காரகன் என்றெல்லாம் போற்றப்படும்  புதன் பகவானே இந்த ராசியின் அதிபதி. இது ஒரு பெண்தன்மைக் கொண்டராசி.  திசைகளில் தெற்கை குறிக்கும்.  பஞ்ச பூதங்களில் மண்ணை குறிக்கும் ராசி இது.

கன்னிக்கு உரிய தெய்வம் விஷ்ணு. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு  புரட்டாசி மாதம் சூன்யமாதம்.  அதனால் புரட்டாசி மாதத்தில் இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்களுக்குரிய  எந்த சுபகாரியங்களும் செய்யக் கூடாது. கன்னியில் பிறப்பவர்கள்  பொதுவாக நல்லவர்கள்.  தாய் தந்தையர் மீது தனி அன்பு செலுத்துவார்கள்.  இளமையில்  கொஞ்சம் கஷ்டப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும்.

அறிவாளிகள், அதிகம் யோசிப்பவர்கள்.  ஆளுமைத்திறன் மிக்கவர்கள். மிக தீர்க்கமாக முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.  ஆலோசனை சொல்வதிலும், அபிப்பிராயங்கள் சொல்வதிலும் ஆற்றல் மிக்கவர்கள். இந்த ராசியில் பிறக்கும் ஆண்கள் அழகான கட்டுடல் அமையப் பெற்றாலும்  பெண்கள் அழகாக இருப்பதில்லை.  ஆனால் எத்தனை  வயதானாலும், எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் கட்டுடல் கலையாமல் இருப்பார்கள்.

கன்னியில் பிறக்கும் ஆண்பெண்  இருபாலாருமே மற்றவர்கள் பார்வைக்கு சபலம் நிறைந்தவர்களாக அடையாளம் காட்டும்.  அதற்கு காரணம்… வலிய வலிய போய் வாய் ஓயாமல்  பேசுவதால்தான். சூழ்நிலைக்கு தகுந்தவாறு  தன்னை மாற்றிக் கொள்ளும் இவர்களை ஏமாற்ற  முடியாது.  தமக்கென ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்  கொள்வார்கள்.  அந்த லட்சியம் இவர்கள் செய்யும் ஒவ்வொறு காரியத்திலும் பிரதிபலிக்கும்.

அறிவுத்திறன்மிக்க துறைகளில்  அதிகம் இருப்பார்கள். ஆசிரியராக இருப்பதும் இவர்களே.  ஆடிட்டராக இருப்பதும் இவர்களே.  வங்கித்துறைகளில்  இருப்பதும் இவர்களே.  இன்னும் சொல்லப் போனால் ஜோதிடம், எண்கணிதம், வானசாஸ்திரம், சட்டம், கமிஷன், தரகு போன்ற துறைகளிலும் இருப்பார்கள். கலை, கதை, கவிதை இவற்றில் நிபுணத்தவம் பெற்றவர்கள்.  5, 8, 9, 10, 18, 19 வயதுகளில் நெருப்பாலும், நீரினாலும், உடல் நலக்குறைவுனாலும் கண்டங்கள் வருமாம்.  இதைத் தாண்டினால் எழுபது வயதுவரை வாழ்வார்கள் என்கிறது சாஸ்திரம்.

கன்னி ராசியில்  பிறந்தவர்களுக்கு புரட்டாசி மாதம் சூன்ய மாதமாகும்.  எந்த சுபகாரியங்களும் இந்த ஆவணி மாதத்தில்  செய்யக்கூடாது.

நல்ல நாட்கள் : திங்கள், வியாழன், வெள்ளி
ஆகாத நாள் : செவ்வாய்
மத்திமநாட்கள் : சனி, ஞாயிறு
ராசியான நிறம் : பச்சை,மஞ்சள்,சந்தனக்கலர்
ஆகாத நிறம் : கருப்பு, சிகப்பு
ராசியின் நிறம் : பச்சை
ராசியின்   : உத்திரம் 2, 3, 4
நட்சத்திரங்கள் ஹஸ்தம் 1, 2, 3, 4  சித்திரை 1, 2

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop