ரிஷபம்
வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண்போன்ற ஜோதிடத்தின் இரண்டாவது ராசி ரிஷபம். தமிழ் மாதங்களில் வைகாசி மாதத்துவக்கம் இந்த ரிஷபராசியில்தான் ஆரம்பமாகிறது. இந்த ராசியின் அதிபதி அசுரகுருவான சுக்கிர பகவான். இந்த ராசியில் பிறந்தவர்கள் கடின உழைப்புக்குப் பெயர் போனவர்கள்.
ஆடம்பரப் பிரியர்கள், அலங்கார ரசிகர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சிந்தாந்தம் கொண்டவர்கள். உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். நன்றி மறக்காதவர்கள். நல்லதையே செய்பவர்கள். அதனால் நல்லதையே நாடுபவர்கள், என்றாலும் கோபம் வந்தால் எரிமலையாக சீறுவார்கள். வாழ்க்கையில் நிதானமாக முன்னேறுவார்கள். அடுத்தவர்கள் அபிப்பிராயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.
முடிவெடுத்தால் முடிக்கும் குணம். பசிக்கு உண்பதைவிட ருசிக்காக உண்ணும் போஜனப் பிரியர்கள். கலை உணர்வு மிக்கவர்கள். ஏதாவது ஒரு கலையில் சிறந்து விளங்குவார்கள். இது ஒரு மண்தத்துவ ராசி. 5, 13, 16, 19, 20 வயதுகளில் அக்னி, தண்ணீர், சுரம் இவற்றால் கண்டம்.
ரிஷபராசியில் பிறந்தவர்களுக்கு வைகாசி மாதம் சூன்ய மாதமாகும். அதனால் வைகாசி மாதத்தில் எந்த சுபக்காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
நல்ல நாட்கள் -: திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு
ஆகாத நாள் -: சனி
மத்திம நாள் -: செவ்வாய்
ராசியான நிறம் -: வெளிர் நிறங்கள் அனைத்தும், பொன்நிறம்
ஆகாத நிறம் -: கருப்பு, சிகப்பு
ரத்தினக்கல் : -வைரம்
ராசியின் நிறம் -: வெள்ளை
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் : கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1,2, 3, 4 மிருகசீரிஷம்1, 2