விருச்சிகம்
வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண் போன்ற ஜோதிடத்தின் எட்டாவது ராசி விருச்சிகம். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாத துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். பஞ்ச பூத தத்துவங்களில் நெருப்பை குறித்தாலும் நீர்வளம் நிறைந்த ராசி. இது ஒரு பெண் ராசி.
இந்த ராசியின் சின்னமாக தேள் வருவதாலோ என்னவோ வார்த்தைகளால் கொட்டும் தன்மை கொண்ட இவர்கள், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என தீர்க்கமாக பேசுவார்கள். ஆனால் பேச்சில் எப்போதும் கிண்டலும் கேலியும் கலந்திருக்கும். நகைச்சுவை உணர்வு இருந்தாலும் நறுக்குத் தெரித்த மாதிரியும் பேசுவார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். வேடிக்கையாக பேசுகிறார்கள் என்பதற்காக வார்த்தையை தவறாக விட்டால் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத அளவிற்கு காயப்படுத்திவிடுவார்கள்.
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணவசதி என்பது தேவையான போது, தேவையான அளவிற்கு வந்துவிடும். உடன் பிறந்தவர்கள் நிறைய பேர் இருப்பினும், உறவுநிலை சிறப்பாக இருப்பதில்லை. எதிரிகளை வெல்லும் இவர்கள், காம இச்சை நிறைந்தவர்கள் என்கிறது சாஸ்த்திரம். மன வாழ்க்கையில் மன வேற்றுமைகள் இருந்து கொண்டே இருக்குமாம். சில சமயங்களில் இவர்கள் செய்கையும், நடவடிக்கையும் மிகவும் இரகசியமாக இருக்கும். அதனால் இவர்களை மற்றவர்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் சூழ்நிலை உருவாகும். இரசாயணம், சுரங்கம், சித்தவைத்தியம், பந்தயம், சூதாட்டம், காவல்துறை போன்றவற்றில் பணி அமைகிறது.
3, 5, 10, 18, 40, வயதுகளில் கண்டங்கள், ஆயுள் தோஷங்கள் ஏற்படுகிறது. இதை தாண்டினால் 85 வயது வரை வாழ்வார்கள். விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கார்த்திகை மாதம் எந்த சுபகாரியங்களும் செய்யாமல் தவிர்ப்பது நலம்.
நல்ல நாட்கள் :- திங்கள், வியாழன், வெள்ளி
ஆகாத நாள் : -செவ்வாய்
மத்திம நாள் :- புதன்
ராசியான நிறங்கள்: -வெள்ளை, மஞ்சள், சிவப்பு, சந்தனக்கலர்
ஆகாத நிறங்கள் – : பச்சை, கருநீலம்
ரத்தின கற்கள் – : கனகபுஷ்பராகம், மாணிக்கம், பவளம்
ராசியின் நிறம் – : சிவப்பு
ராசியில் உள்ள – : விசாகம் 4,
நட்சத்திரங்கள் அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4