மீனம்
வேதத்தின் கண் ஜோதிடம். அந்த ஜோதிடத்தின் 12வது ராசி மீனம். தமிழ மாதங்களில் பங்குனியை குறிக்கும் ராசி இது. இதன் அதிபதியாக இயற்கை சுபர் குரு பகவான் வருகிறார்.
பஞ்ச பூத தத்துவங்களில் நீர் ராசியான இது ஒரு பெண்ராசி. பொதுவாக மீன ராசியில் பிறந்தவர்கள் அனுசரித்துப் போகும் அமைப்பைப் பெற்றவர்கள். எளிதில் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கும் இவர்கள், கருணையும், கனிவும் நிறைந்தவர்கள். கற்றவருக்கும், மற்றவருக்கும் நல்லவர்கள். ஈடுபடும் எதிலும் வெற்றி ஒன்றையேப் பெறுவார்கள்.
பெரியோர்களை மதிப்பார்கள். செலவாளிகள். இரக்க மனமும், ஈகை குணமும் உள்ளவர்கள். தன்னம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும சமயத்திற்கு தகுந்த மாதிரி வளைந்து கொடுக்கும் மனோபாவம் உள்ளவர்கள். நீதி, நேர்மை தவறாத இவர்களுக்கு குறுக்கு வழி தெரியாது. விட்டுக்கொடுக்கும் தன்மை உள்ளதால், கண்டிக்கவோ தண்டிக்கவோ தெரியாது. தங்கள் லட்சியங்களை மாற்றிக் கொண்டே இருந்தாலும் உயர்ந்தவையாக இருக்கும்.
வெகு சீக்கிரம மற்றவர்களின் மனதைக் கவர்வார்கள். கலையார்வம் மிக்கவர்கள். ஏதாவது ஒரு கலையில சிறப்பு மிக்க பண்டிதராய் மாறுவார்கள். பிறரை எளிதில் நம்புவார்கள். அதனால் அடிக்கடி ஏமாறினாலும், இந்த குணம் மட்டும் மாறுவதே இல்லை. எதிரிகளையும் நேசிக்கும் எளிய மனம் படைத்தவர்கள். பெரும்பாலும் பணத்தட்டுப்பாடு இருக்காது. கௌரவமான வாழ்க்கை அமையும். இல்லற வாழ்வு இனிமையாக இருக்கும். எத்தகைய துன்பம், துயரம் கஷ்டம் வந்தாலும், பணக்கஷ்டம் மட்டும் வரவே வராது.
பங்குனி மாதம் சூனிய மாதமாகையால் எந்த சுபகாரியங்களையும் பங்குனி மாதம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. 3, 4, 7, 12, 20, 28, வயதுகளில் நோய், கண்டங்கள் வந்து விலகும். இதை தாண்டினால் பூரண ஆயுள் என்கிறது சாஸ்திரம்.
நல்ல நாட்கள் : புதன், திங்கள், செவ்வாய்
ஆகாத நாள் : சனி
மத்திம நாள் : வெள்ளி
ராசியான நிறம் : சிவப்பு, மஞ்சள், சந்தனக் கலர்
ஆகாத நிறம் : கருப்பு
ரத்தின கற்கள் : மாணிக்கம், கனக புஷ்ப ராகம்.
ராசியின் நிறம் : பொன் மஞ்சள்
ராசயின் : பூரட்டாதி 4,
நட்சத்திரங்கள்: உத்திரட்டாதி 1, 2, 3, 4 ரேவதி- 1, 2, 3, 4.