துலாம்
வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண் போன்ற ஜோதிடத்தின் ஏழாவது ராசி துலாம். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாத துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். துலாம் ராசியின் அதிபதி பிருகு முனிவரின் புத்திரன், அசுர குரு, என்றெல்லாம் போற்றப்படும் சுக்கிர பகவான். சுக்கிரன்
மகாலட்சுமியின்அம்சமாக சொல்லப்படுகிறது. ராசி வரிசையில் பெண் ராசி. பஞ்ச பூத தத்துவங்களில் காற்று ராசி. இந்த ராசியில் ஆண்கள் பிறந்தாலும் பெண் தன்மை நிறைந்தே இருக்கும். அதாவது நளினம், மென்மை கலந்தே இருக்கும்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள், ராசியின் குணத்திற்கேற்ப மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். நன்றி மறவாத குணம் உள்ளவர்கள். நிறைய சம்பாதித்து நிறைய செலவு செய்வார்கள். இவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே மெல்லிய புன்னகை வந்துவிடும். நேர்மை தவறாத இவர்களுக்கு நேர்மை தவறினால் கோபம் வரும். ஆடம்பரக் பிரியர்கள். அழகை ஆராதிப்பவர்கள். கற்றது குறைவாக இருப்பினும் மெத்த படித்த மேதாவிகள் போல் பேசுவார்கள். பல கலை வித்தகர்கள். அனைவருக்கும் அன்பானவர்கள்.
நடுத்தர வயதில் திருமணம் நடந்தால் வாழ்க்கை துணை வாய் துடுக்காக வந்து சேரும். குடும்பத்தை கட்டி ஆள தகுதிப்படைத்தவர்கள் இவர்கள். 7,9,10,11,12,18 வயதுகளில் நோய் பீடைகளால் கண்டம் உண்டு. இந்த வயதைத் தாண்டினால் 85 வயது வரை ஆயுள் என்கிறது சாஸ்த்திரம். பெரும்பாலானவருக்கு இரு தாரம் அமைகிறது. ஐப்பசி மாதம் சூன்ய மாதமாகும். எனவே,
துலாம் ராசியில் பிறந்தவர்கள் ஐப்பசியில் எந்த சுப காரியங்களையும் தவிர்ப்பது நல்லது.
நல்ல நாட்கள் -: திங்கள், புதன்,வெள்ளி
ஆகாத நாட்கள் :- வியாழன், சனி
மத்திம நாட்கள் – : ஞாயிறு, செவ்வாய்
ஆகாத தேதிகள் -: 1,10,19
ராசியான நிறங்கள்: வெள்ளை, பச்சை,
சிவப்பு, வயலட்
ஆகாத நிறம் :- கருப்பு
ரத்தின கற்கள் : – வைரம், மரகதம்
ராசியின் நிறம் :- வெள்ளை
ராசியில் உள்ள : – சித்திரை 1,2
நட்சத்திரங்கள் சுவாதி 1,2,3,4 விசாகம் 1,2,3