section-48cb531
Categories
தசாபுக்தி மாறினால் ஜோதிடர் சொல்லும் பலன்கள் தாமதமாக நடக்கும் அல்லது தவறாக, முன் பின்னாக நடக்கும். லக்னம், ராசி, நட்சத்திரம் மாறினால் எல்லாமே மாறிப் போய் விடும். அந்த ஜாதகத்தை அடிப்படையாக வைத்துப் பலன்கள் சொன்னால் அது சரியாக இருக்காது. கணிப்புகள் தவறும். பாதக பலன்களும் ஏற்படலாம்.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கூட இம்முறை பின்பற்றப் படுகிறது.
பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்.
தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.
ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்.
3 – வியாழன், 4 – ராகு, 5 – புதன்,
6 – சுக்கிரன், 7 – கேது, 8 – சனி,
9 – செவ்வாய்.
உதாரணமாக ஒருவர் 2 – 6 – 1956 எனக் கொள்வோம். பிறந்த தேதி 2 அதன் கூட்டுத் தொகை 29 இதனையும் கூட்டினால் அதாவது 2 மற்றும் 9 கூட்டும் போது 11 என வரும். இதே போன்று 1 மற்றும் 1 ம் சேர்த்துக் கூட்டினால் 2 என வரும். இதுவே விதி எண் என்பதாகும்.
இன்றைய இயந்திர உலகத்தில், நாம் எப்போதுமே பிரச்சினைகளோடு வாழப் பழகி விட்டோமே ஒழிய, ஆற அமர்ந்து பிரச்சினைகளைத் தீர்த்து பிரச்சினையின்றி வாழ இயலாமல் போய்விட்டது என்பது தான் உண்மை.
இந்த நிலையில் நமக்கு இயற்கையின் அடித்தளமாக விளங்கும் விலைமதிப்பில்லா சூரிய ஒளியை நாம் நம் வீட்டில் சரியான முறையில் பயன்படுத்தினாலே நம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்பதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை உண்மை.
1. தர்க்கரீதியான முடிவு (Logical Conclusions):
குறிப்பிட்ட கண்டுபிடிப்பை தர்க்கரீதியாகத்தான் மெய்ப்பிக்க முடியும் என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்து கொள்வோம்.
A = B என்றும் B = C என்றும் வைத்து கொண்டால் A = C என்று மெய்ப்பிக்க முடியும்.
2. செயலறிவு சார்ந்த முடிவு அல்லது அனுபவ அறிவு (Empirical Relationship)
தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத விஷயங்களை புள்ளிவிவரங்களை (Statistics) கொண்டுதான் மெய்ப்பிக்க முடியும் / சொல்ல முடியும். இது அனுபவத்தையும், புள்ளி விபரங்களையும் அடிப்படையாக கொண்ட ஒரு விஷயமாகும்.
இதே போன்று வாஸ்து என்பது அறிவியலே என்று தர்க்கரீதியாக அனைத்து விஷயங்களையும் மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அனைத்தையும் மெய்ப்பிக்க முடியும்.
இயற்கையின் அபரிமிதமான ஆற்றலை, சக்தியை மனித வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முறைப்படுத்திப் பயன்படுத்துவதே வாஸ்து.
நவக்கிரகம் என்று அழைப்பது போல நாம் வாழும் வீட்டையும் கிரகம் என்று கூறுவார்கள். அதனால்தான் புதுமனையில் குடியேறுவதையும் கிரகப்பிரவேசம் என்கிறோம்.
எங்கு சென்று வந்தாலும் ஓய்வெடுப்பதும், வாழ்வதும் வீட்டில்தான். எனவே வீட்டில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் கதிர் வீச்சுக்கள் நம்மை தாக்காமல் அவற்றை நம் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் கலையே வாஸ்து சாஸ்திரக் கலையாகும். இது ஆயக் கலைகள் 64ல் ஒன்றான ஜோதிடக் கலையில் ஒரு பிரிவாகும்.
நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகும். அதனை வீட்டின் தென் கிழக்கு மூலையில் வைத்து பயன்படுத்தினோம் என்றால் ஆக்கப்பூர்வமான பலன்கள் உண்டாகும். தென்கிழக்கு மூலையில் சமையல் அறை அமைத்து, கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சமைத்தால் அந்த உணவு அதிக சுவை தரும். வீணாகாது. எளிதில் கெடாது. சமைத்துக் கொண்டிருக்கும்போதே ஸ்டவ் வெடிப்பது, வெந்நீர் காலில் கொட்டிக் கொள்வது போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படாது.
ஜோதிட சாஸ்திரத்தில் தென் கிழக்கு மூலைக்கான கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில் சுபத் தன்மை பெறாமல், பாவ கிரக சேர்க்கையில் அல்லது வீச்சில் அமைந்திருக்குமானால் அவர்களுக்கு சமையலறை அமையும் திசை மாறுபடும்.
அது அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை வைத்து முடிவு செய்ய வேண்டும். எனவே வாஸ்துவை அவரவர்களின் ஜாதகத்துடன் இணைத்து நடைமுறைப்படுத்தும்போதுதான் முழுப் பலனை அடைய முடியும்.
சமையலறைக்கு கூறியைதப் போல ஒவ்வொரு விடயத்திலும் ஒருவருடைய மனைக்காரரின் ஜாதகத்தின் அடிப்படையிலேயே வாஸ்து சாஸ்திரத்தை கையாள வேண்டும். அது முக்கியமானது.
அதேபோல, திருப்பதி இருக்கும் திசை வடக்கு என்பார்கள். தென்கிழக்கு அக்னி மூலையாகும். நமது சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது என்பார்கள். சமயம், மதம் தொடர்பான இடங்கள் அமைந்துள்ள திக்குகளைக் கொண்டு திசை நிர்ணயிக்கப்பட்டது.
அதையே அடிப்படையாகக் கொண்டு வடக்கை நிர்ணயம் செய்து கொண்டு வாஸ்து பார்க்கலாம்.
அதோடு மட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் பிராண வாயு அதிகமாகக் கிடைக்கிறது. எனவே வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைத்தால் அதன் காரணமாக வீட்டில் பிராண வாயுவின் விகிதம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருப்பர்.
இதன் காரணமாகவே பூஜை அறை, பெரியவர்கள் தங்கும் அறை உள்ளிட்டவற்றை ஈசானிய மூலையில் பழங்காலத்தில் அமைத்தனர்.
சில வீடுகளில் ஆண் சந்ததியே இல்லாமல் இருப்பதும் உண்டு. அதற்கு அந்த வீட்டின் ஈசானிய மூலையை அடைத்து வைத்திருப்பதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாக வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு.
தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருப்பது நல்லது. காரணம் தென்மேற்கு திசையை குபேர மூலை (நைருதி) என்று வாஸ்து கூறுகிறது. அங்கு திறப்புகள் (ஜன்னல்கள்) இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விகள் யாவும் நியாயமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அதாவது இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?, வீராட் கோலி சதமடிப்பாரா? போன்ற பொதுவான கேள்விகளுக்கு பிரசன்னத்தின் மூலமாக தீர்வு காண முடியாது.
பிரசன்னத்தில் ஜாதகர் நேரிடையாக தமக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களின் சார்பாகவோ, நெருங்கிய நண்பர்களின் சார்பாகவோ கேள்விகளை முன் வைக்கலாம். அப்போது தான் பிரசன்னம் பலிதம் ஆகும்.
இந்த ஜனன கால ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய யோக அவயோகங்களை (நல்ல தீய பலன்களை) பற்றியும்; மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக மேற்குறிப்பிட்ட அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புக்களில் குழப்பம் உள்ளவர்களுக்கும் பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
ஒருவர் பிறந்த நட்சத்திரம் கொண்டு அவருக்கான பறவை அறியப்படும்.
ஆந்தை: திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்
காகம்: உத்தரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்.
கோழி: அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம்.
மயில்: திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி.
வல்லூறு – படுபட்சி நாட்கள்
வளர்பிறையில் – வியாழன், சனி
தேய்பிறையில் – செவ்வாய்
ஆந்தை– படுபட்சி நாட்கள்
வளர்பிறையில் – ஞாயிறு, வெள்ளி
தேய்பிறையில் – திங்கள்
காகம் – படுபட்சி நாட்கள்
வளர்பிறையில் – திங்கள்
தேய்பிறையில் – ஞாயிறு
கோழி – படுபட்சி நாட்கள்
வளர்பிறையில் – செவ்வாய்
தேய்பிறையில் – வியாழன், சனி
மயில் – படுபட்சி நாட்கள்
வளர்பிறையில் – புதன்
தேய்பிறையில் – புதன், வெள்ளி
பட்சியின் நட்சத்திற்குரியோர் உரிய காலத்தை அறிந்து செயலை துவங்க வேண்டும்.
section-d9f60db
What Clients Are Saying
Lorem ipsum dolor sit amet, consectetur
adipiscing elit, sed do eiusmod.